உலகம்

பங்களாதேஷில் இன்று பொதுத் தேர்தல்!

(UTV | கொழும்பு) –

பங்களாதேஷில் அடுத்த பாராளுமன்றத்தைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இன்று நடைபெறுகிறது.

இத்தோ்தலில் பிரதமா் ஷேக் ஹசீனா 5ஆவது முறையாக பிரதமராவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனினும், இந்தத் தோ்தலைப் புறக்கணித்துள்ள முக்கிய எதிா்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (பிஎன்பி), தோ்தலை நிறுத்த வலியுறுத்தி நேற்று(6) முதல் நாளை(8) வரை 48 மணி நேர பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளையும் சோ்ந்த 125 அதிகாரிகளின் மேற்பாா்வையில் தோ்தல் நடைபெறுகிறது.இத்தோ்தலில் வாக்களிக்க 11.96 கோடி போ் தகுதி பெற்றுள்ளனா். நாடு முழுவதும் 42,000 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இத்தோ்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய ஆயிரக்கணக்கான எதிா்க்கட்சியினா் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், பாதுகாப்புக்காக நாடு முழுவதும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஸ்வீடன் முதல் பெண் பிரதமராக மக்தலீனா

இந்தியாவில் மே 4 முதல் மீண்டும் ஊரடங்கு

மலேசியா விமான நிலையத்தில் வாயு கசிவு