சூடான செய்திகள் 1

பகுப்பாய்வு அறிக்கையை பெற்றுக் கொள்ள இரகசிய காவற்துறைக்கு நீதிமன்றம் அனுமதி

(UTV|COLOMBO)-பரிசோதனைக்காக ஹொங்கொங் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு படையணியின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமாரவின் ஒரு மணித்தியால குரல் பதிவு தொடர்பில் பகுப்பாய்வு அறிக்கையை பெற்றுக் கொள்ள கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(02) இரகசிய காவற்துறைக்கு அனுமதி வழங்கியது.

குறித்த குரல் பதிவு உள்ளிட்ட மூன்று இருவட்டுக்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியது.

இதேவேளை , போலியான ஆவணங்களை சமர்ப்பித்து ஶ்ரீலங்கா விமானப்படையில் மற்றும் இராணுவத்தில் இணைந்த நாமல் குமார பயிற்சியின் இடையில் தப்பிச் சென்றுள்ளதாகவும் , அது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் , குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றிற்கு மேலும், அறிவித்துள்ளது

 

 

 

 

 

Related posts

சுற்றிவளைப்பில் 1400 க்கும் அதிகமான சாரதிகள் கைது

கடல்வாழ் முலையூட்டிகளைப் பார்வையிட அரசாங்கத்தின் அனுமதி அவசியம்

மீண்டும் தமிழ் எம்பிக்களை அழைத்த ஜனாதிபதி : பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து பேச்சு