சூடான செய்திகள் 1

நோர்வே வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு

(UTV|COLOMBO) நோர்வே வௌியுறவுத்துறை அமைச்சர் மெரிஏன் ஹேகன், உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 5 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது அவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க , வௌிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

மேலும் , காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலக பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகள் குழுவொன்றையும் நோர்வே வௌியுறவுத்துறை அமைச்சர் சந்திக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அந்நாட்டு தூதரகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

சிறைக் கைதிகளுக்கும் வாக்குரிமை வழங்கக் கோரி மனுத்தாக்கல்

மாவனல்லையில் புத்தர் சிலையினை சேதப்படுத்திய சந்தேக நபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

இலஞ்சம் பெற்ற அதிபருக்கு கிடைத்த தண்டனை