உலகம்

நைஜீரியாவில் லொறி வெடித்து விபத்து – 25 பேர் பலி

(UTV | நைஜீரியா ) – நைஜீரியா நாட்டில் டேங்கர் லொறி வெடித்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 25 பேர் சிக்கி உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நைஜீரியா நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் டேங்கர் லொறி திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பிற வாகனங்கள் மீது மோதி வெடித்து தீப்பிடித்தது.

இதன் காரணமாக அந்தப் பகுதியை கரும்புகை சூழ்ந்து கொண்டது. இந்த கோர விபத்தில் குறைந்தது 25 பேர் சிக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மியன்மார் இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் [UPDATE]

கன்னி பயணத்தை ஆரம்பிக்கும் உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்!

ஐ.நா. பொது செயலாளர் இராஜினாமா செய்ய வேண்டும் – இஸ்ரேல் கோரிக்கை.