உள்நாடு

நேற்றைய தினம் 26 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,195 ஆக திகரித்துள்ளது.

இதற்கமைய நேற்றைய தினம்(12) மாத்திரம் 26 பேர் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கட்டாரில் இருந்து நாடு திரும்பிய 22 பேர், குவைட் நாட்டிலிருந்து வருகைத் தந்த 2 பேர், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நாடு திரும்பிய இருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,983 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தற்போது 200 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு புதிய நீதிபதி

நாமல் குமார கைது

editor

பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் மேலும் 04 பேர் கைது