உள்நாடு

நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் விபரம்

(UTV | கொவிட்-19) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 21 பேர் நேற்று (07) பதிவாகியுள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1835 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று பதிவானோரில் 16 பேர் குவைட்டிலிருந்து நாடு திரும்பிய நிலையில், திருகோணமலை மற்றும் மின்னேரியா தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்களென தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இருவர் கட்டாரிலிருந்து நாடு திரும்பியவர்கள் என்பதுடன், ஒருவர் பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பியவர் எனவும் மற்றைய இருவர் பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானதையிட்டு பாராட்டி கெளரவிக்கப்பட்டார் அஷ்ரப் தாஹிர்

editor

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவை சந்தித்தார்

editor

ஆளுங்கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு