உள்நாடு

நேற்று இனங்காணப்பட்ட கர்ப்பிணிப் பெண் வழங்கிய முகவரி தவறானது

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், கொழும்பு சொய்சா பெண்கள் மகப்பேற்று வைத்தியசாலையில், நேற்று (24) இனங்காணப்பட்ட கர்ப்பிணிப் பெண் தவறான முகவரியை வழங்கியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் தனது வதிவிட முகவரியை வழங்காது வேறு முகவரியை வழங்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது வைத்தியசாலை தரப்பினர்  குறித்த பெண் தொடர்பில் சந்தேகம் கொண்டு, பிரத்தியேக  வார்ட்டில் அப்பெண்ணை அனுமதித்துள்ளனர்.

பின்னர், குறித்த கர்ப்பிணிக்கு பீ.சீ.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டபோதே, தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருதானை பகுதியில் கொரோனா  தொற்று பரவியுள்ளதையடுத்து, இப்பெண் வேறு முகவரியை வழங்கியுள்ளார்.

எனினும், இவ்வாறு தவறான  முகவரியை வழங்கி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதால், நோய் தொற்று ஏனையோருக்கும் பரவும் அபாயம் நிலவுவதாக, பணிப்பாளர் தெரிவித்துள்ளதுடன், சரியான முகரியை வழங்கி ஒத்துழைக்குமாறு  கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 310 ஆக உயர்வு

பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அரசியலமைப்பு சபை அனுமதி!

தேர்தல் ஆணைக்குழுவின் அதிரடி அறிவிப்பு.