சூடான செய்திகள் 1

நீர் விநியோகம் துண்டிப்பு

(UTV|COLOMBO)-இலங்கை மின்சார சபையின் திருத்த வேலை காரணமாக கேன்கஹஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

இதனால் இன்று (17) பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இன்று காலை 8 மணிமுதல் மாலை 7 மணி வரையான 11 மணிநேர காலப்பகுதியில் இந்த நீர் விநியோகம் துண்டிக்கடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி வாத்துவை, வஸ்கடுவை, பொத்துபிட்டிய, களுத்துறை, கட்டுகுருந்த, நாகொட, பயாகல ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பிலிமினவன்ன, பெம்புவல, பேருவளை, களுவமோதர, மொரகல்ல, அழுத்கம, தர்கா நகர் மற்றும் பென்தொட ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகம் துண்டிக்கடவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை அரசு நிறுத்தி வைக்க தீர்மானம்

சபாநாயகர் தலைமையில் விசேட கட்சித்தலைவர்களின் கூட்டம் இன்று