சூடான செய்திகள் 1

நீர்த்தேங்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு…

(UTV|COLOMBO)-மழையுடனான வானிலை காரணமாக, மகாவலி அதிகாரசபைக்கு உட்பட்ட பல நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 80 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

இதன்படி மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் தற்போது 99.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

ரந்தெனிகல நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 95.1 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 92 சதவீதமாகவும், உடவளவை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 96.2 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

அத்துடன் காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் தற்போது 75 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கந்தளாய், ராஜாங்கனை, நாச்சியாதுவ, திஸாவெவ, ஹருலுவெவ ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் 90 சதவீதமாக அதிகரித்திருப்பதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும் தம்புலு ஓய, கலாவெவ, பராக்கிரம சமுத்திரம், கவுடுல்ல, கிரிதலை மற்றும் மாதுரு ஓய ஆகிய நீர்த்தேக்கங்களும் குறிப்பிடத்தக்க அளவு உயர்வடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வங்காள விரிகுடா வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக, எதிர்வரும் சில தினங்களுக்கும் நாட்டில் மழையுடான வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

 

Related posts

கோட்டாபயவுக்கு ஆதரவு வழங்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானம்

ஶ்ரீலங்கா கிரிக்கட் தேர்தல் மே 31 ம் திகதிக்கு முன்

ஸ்ரீ.சு.க மற்றும் ஸ்ரீ.பொ.பெ இடையே ஏப்ரல் 10 மீளவும் பேச்சுவார்த்தை…