சூடான செய்திகள் 1

நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO)-தப்போவ நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

குறித்த வான் கதவுகள் இரண்டு அடி வரை திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மழையுடனான காலநிலை இன்றும் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று நண்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரசேதங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு வடமத்தி கிழக்கு வடமேல் ஊவா மற்றும் மத்திய மகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்றும் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

Related posts

சுகாதார அமைச்சர் பதவிக்கு ராஜித சேனாரத்ன பொருத்தமற்றவர்-GMOA

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 414 ஆக உயர்வு

எட்டாவது பாராளுமன்றத்தின் 4வது கூட்டத் தொடர் நாளை