உள்நாடு

நீர்கொழும்பில் கொலை – ஒருவர் கைது

(UTV|நீர்கொழும்பு)–நீர்கொழும்பு, பெரியமுல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவமொன்றில் சந்தேகநபர் ஒருவர் இன்று(10) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு, பெரியமுல்லைப் பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியில் பெரியமுல்லை பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதோடு, நால்வர் படுகாயமடைந்த நிலையில் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

களுத்துறையின் சில பகுதிகளில் 24 மணித்தியாலய நீர் வெட்டு

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் – கல்வியமைச்சின் தீர்மானத்தில் மாற்றமில்லை

editor

நாட்டு நிலவரம் மிகவும் ஆபத்தானது