உள்நாடுசூடான செய்திகள் 1

நீரில் அடித்துச் செல்லப்பட்ட வாழைச்சேனை இளைஞன் ஜனாஸாவாக மீட்பு

(UTV | கொழும்பு) –

(எச்.எம்.எம்.பர்ஸான்)

நாசிவன்தீவு பகுதியில் நேற்று (12) வெள்ளிக்கிழமை நீரில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயதுடைய அதீக் எனும் இளைஞன் இன்று (13) சனிக்கிழமை காலை 7.30 மணியளவில் ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார்.

நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞனே இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தார்.

நேற்று சுழியோடிகள் கடும் தேடுதல் மேற்கொண்ட போதும் இளைஞன் மீட்கப்படவில்லை.

இன்றைய தினம் இளைஞன் சுழியோடிகளின் முயற்சியால் மீட்கப்பட்டுள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், மரண விசாரணைகளின் பின்னர் ஜனாஸா உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம்

பாடசாலை மாணவர்களுக்கு சட்டக்கல்வி அறிமுகம்