உள்நாடு

நீதி அமைச்சின் பொதுமக்கள் சந்திப்பு தினம் இணையத்தளத்தில்

(UTV | கொழும்பு) – நீதி அமைச்சின் பொதுமக்கள் சந்திப்பு தினத்தை இணையத்தளத்தின் மூலமாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலைமையின் கீழ் பொதுமக்கள் நீதி அமைச்சுக்கு வருகை தருவதில் காணப்படும் சிரமங்களைக் கருத்திற்கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, நீதி அமைச்சர் அலி சப்ரியின் ஆலோசனையின் அடிப்படையில், திங்கட்கிழமைகளில் இடம்பெறும் பொதுமக்கள் சந்திப்பு தினத்தை இணையத்தளத்தின் ஊடாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும், பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை முன்வைப்பது தொடர்பான வழிகாட்டல்களை நீதி அமைச்சின் இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் எனவும் குறித்த முறைப்பாடுகளை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு முன்னர் முன்வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

யுகதனவி ஒப்பந்தம் : சட்டமா அதிபரின் கோரிக்கை

MV XPress Pearl கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்படவில்லை

தொலைந்த கைப்பேசி தொடர்பில் அறிவிக்க ஆன்லைன் சேவை