கேளிக்கை

நீண்ட இடைவேளைக்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுக்கும் அமலா

(UTV|INDIA)-காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சுனைனாவுக்கு வரவேற்பு பெற்றுத்தந்தது வம்சம், நீர்ப்பறவை உள்ளிட்ட படங்களில் நடித்த கிராமத்து கதாபாத்திரங்கள் தான்.

இதனையடுத்து சமர், தொண்டன் போன்ற படங்களில் நடித்தார். திரைப்படங்களி லிருந்து இணைய தொடர் பக்கம் திரும்பியுள்ள சுனைனாவுக்கு, ஹாரர் திரில்லரில் உருவான ‘நிலா நிலா ஓடிவா’ என்ற வெப் தொடர் நல்ல பெயரை பெற்றுத் தந்தது.
தற்போது மற்றுமொரு புதிய தெலுங்கு இணைய தொடரில் நடிக்க சுனைனா ஒப்பந்தமாகியுள்ளார். ஹை பிரீஸ்டஸ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த தொடரை புஷ்பா என்ற பெண் இயக்குநர் இயக்க உள்ளார். இதில் நடிகை அமலாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கஉள்ளார். ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்த நடிகை அமலா, பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனை திருமணம் செய்து கொண்ட பின்னர் திரையுலகில் இருந்து விலகினார். தற்போது இணையதொடர் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார்.

Related posts

ஹெலன் மெர்க்குரி புற்றுநோயால் பலி

உடல் நலம் குறித்து மனம் திறந்து பேசிய சமந்தா

லண்டனில் நிகழ்ச்சி நடத்திய ஸ்ருதிஹாசன்