சூடான செய்திகள் 1

நீச்சல் குளத்தில் மூழ்கி பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

(UTV|COLOMBO) பமுனுகம, அலேன்எகொட பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் மூழ்கி 58 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த உத்தியோகத்தர் தனது கடமைகள் நிறைவடைந்த பின்னர் நீச்சல் குளத்தில் நீராடுவதற்காக சென்ற வேளை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் பமுனுகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பமுனுகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

ரயன் மீண்டும் விளக்கமறியலில்…

உயிர்த்த ஞாயிறன்று உயிரிழந்தவர்களுக்காக விஷேட ஆராதனைகள்

குண்டானவர்களா நீங்கள்?உங்களுக்கு ஓர் நற்செய்தி…