வகைப்படுத்தப்படாத

நீங்கள் முதியவரா ? பிள்ளைகள் கவனிப்பதில்லையா ? அழையுங்கள் 118

(UDHAYAM, COLOMBO) – முதியோருக்கு அபயமளிக்கும் விழிப்புணர்வுத் திட்டம் சமூகவலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க ஆரம்பித்து வைத்தார்.

அமைச்சினால் கொழும்பு மத்திய பஸ் நிலையத்தில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த விழிப்புணர்வு நடவடிக்கையின்போது முதியவர்களுக்கு அபயமளிக்கும் வகையில், அவர்களுக்கு உதவி செய்வது தொடர்பிலான ஸ்டிக்கர்கள், பஸ்களில் ஒட்டப்பட்டன.

குறித்த ஸ்டிக்கர்களில் 24 மணி நேரமும் இயங்கும் குறித்த சேவை தொடர்பில் 118, 011-3094543, 011-30945444 ஆகிய தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டுள்ளன.

Related posts

இத்தாலியில் கூட்டணி ஆட்சியமைப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வி

Update – ஜப்பான் நிலநடுக்கத்தில் இருவர் பலி.. சுமார் 40 பேர் மாயம்

Fortnite පරිගණක ලෝක ශූරතාව 16 හැවිරිදි Kyle Giersdor ට