விளையாட்டு

நியூஸிலாந்தை வீழ்த்தி வெற்றியை ருசித்த பாகிஸ்தான்

(UTV|COLOMBO)  ஐ.சி.சி.யின் 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 33 ஆவது போட்டி  நியூஸிலாந்து மற்றும்  தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே மேற்று மாலை 3.00 மணிக்கு பேர்மிங்கமில் ஆரம்பமாகவிருந்தது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 237 ஓட்டங்களை குவித்தது.

238 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பாகிஸ்தான் அணி 49.1 ஓவரில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 241 ஓட்டங்களை பெற்று, நியூஸிலாந்து அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கான வாய்ப்பினை தக்க வைத்துள்ளதுடன் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றால் அரையிறுதிக்கு நுழைவது பெரும்பாலும் உறுதியாகிவிடும்.

 

 

Related posts

குசல் மெண்டிஸும் சதம் அடித்தார்

“டேவிட் பெக்காம்” கார் ஓட்டத் தடை!

உலகக் கிண்ணத்தில் ஸ்மித் – வார்னர் விளையாடுவார்கள்..?