விளையாட்டு

நியூசிலாந்தை வீழ்த்தி சம்பியன்ஸ் கிண்ணத்தை சுவீகரித்தது இந்தியா

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

இறுதிப் போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (09) இடம்பெற்றது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 251 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

நியூசிலாந்து அணி சார்பாக டேரைல் மிச்சல் 63 ஓட்டங்களையும், மைக்கல் பிரஸ்வெல் ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில் குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.

பின்னர், 252 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இந்திய அணியின் சார்பாக அணித்தலைவர் ரோஹித் சர்மா 76 ஓட்டங்களையும் ஸ்ரேயாஸ் ஐயர் 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் சென்டர் மற்றும் பிரஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியுள்ளது.

இந்த வெற்றியின் ஊடாக இந்திய அணி மூன்றாவது முறையாக சம்பியன்ஸ் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

முன்னதாக 2002 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் இந்திய அணி சம்பியன்ஸ் கிண்ணத்தை கைப்பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து ரொபின் உத்தப்பா ஓய்வு

முதலாவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது

133 பதக்கங்களை பெற்று அவுஸ்ரேலியா முன்னிலையில்