வகைப்படுத்தப்படாத

நியூசிலாந்தில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

(UTVNEWS|COLOMBO) – நியூசிலாந்து நாட்டில் இன்று காலை 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கம் மக்கள் அதிகம் வசிக்காத கெர்மடெக் தீவு பகுதிகளில் இருந்து வடக்கே ஏற்பட்டுள்ளது.
கடலோர பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்படுத்தும் அளவில் சுனாமி அலைகள் இருக்கும் என முதலில் எச்சரிக்கை விடப்பட்டது.

பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது. அதன்பின், சுனாமி எச்சரிக்கையை நியூசிலாந்து அரசு வாபஸ் பெற்றது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

Related posts

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை

Sivalingam fires Sri Lanka to 15th in Netball World Cup

680 மில்லியன் டொலர் ஊழல்