வகைப்படுத்தப்படாத

நியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

(UTV|NEWZEALAND)-நியூசிலாந்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவாகியிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலநடுக்கம் காரணமாக பாராளுமன்ற கட்டிடம் குலுங்கியதனால் சபை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

டாமரூனியில் இருந்து தென்மேற்கில் சுமார் 25 கிமீ தொலைவில் பூமிக்கடியில் 165 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியிருந்தது.

தலைநகர் வெலிங்டன் முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டதுடன், சுமார் 30 வினாடிகள் அதிர்வு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நிலநடுக்கத்தால் உயிரிழப்பு அல்லது பொருட்சேதம் குறித்து தகவல் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இரண்டு வருடங்களுக்கு பின்னர் அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வந்த துருக்கி

அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக உயர்வு

යෝෂිත – නිතීෂා යුවලට සුබ මංගලම්