கிசு கிசு

நியமிக்கப்படவுள்ள ஆறு நாடுகளுக்கான இராஜதந்திரிகள் விபரம்

(UTV | கொழும்பு) – ஆறு நாடுகளுக்கான இராஜதந்திரிகளை நியமிப்பது தொடர்பில் உயர் பதவிகள் பற்றிய பாராளுமன்றக் குழுவிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

  • ஆப்கானிஸ்தானிற்கான இலங்கை தூதவர் – ஓய்வு பெற்ற அட்மிரல் கே.கே.வீ.பீ ஹரிச்சந்திர த சில்வா
  • ஜப்பானுக்காக இலங்கை தூதவர் – சஞ்சீவ குணசேகர
  • அமெரிக்காவுக்கான இலங்கை தூதவர் – ரவிநாத் ஆரியசிங்க
  • பிரான்ஸிற்கான இலங்கை தூதவர் – பேராசிரியர் ஷானிக ஹிரிபுரேகம
  • சீனாவிற்கான இலங்கை தூதவர் – கலாநிதி பாலித கொஹொனா

இதேவேளை இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகராக மிலிந்த மொரகொடவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நியமனங்கள் தொடர்பில் எந்தவொரு நபருக்கும் கருத்து தெரிவிக்க முடியும் எனவும் அதனை செப்டம்பர் 23 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் எழுத்து மூலமாக அறிவிக்குமாறும் உயர் பதவிகள் பற்றிய பாராளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.

குறித்த இராஜதாந்திரகள் தொடர்பில் உயர் பதவிகள் பற்றிய பாராளுமன்றக் குழுவின் அனுமதி கிடைக்கப்பெற்றவுடன் அவர்கள் நியமிக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வெடிப்புச் சம்பவம் தொடர்பில் நான் அறிந்திருக்கவில்லை-பிரதமர்

‘Miss Tourism World 2022’ இறுதிப் போட்டிகள் இலங்கையில்

தேசியக் கீதத்தின் போது ஜனாதிபதியின் சைகையை தடுத்த பிரதமர்?