உள்நாடு

நிதி அமைச்சராக ரணில் பதவிப்பிரமாணம் [UPDATE]

(UTV | கொழும்பு) – பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஏனைய பாடவிதானங்களுக்கு அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட போதிலும் நிதியமைச்சராக எவரும் பதவிப்பிரமாணம் செய்யவில்லை. நிதியமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விரைவில் நாடாளுமன்றத்தில் நிவாரண வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதே தனது முதல் பணியாக இருக்கும் என வர்த்தக மற்றும் பொருளாதார ஆலோசகர்களுடனான கலந்துரையாடலின் போது தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தல் நடத்துவதில் சிக்கலா? IMFயின் விளக்கம்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் பூரண குணமடைந்துள்ளனர்

துப்பாக்கி பிரயோகத்தில் சந்தேக நபர் ஒருவர் பலி