சூடான செய்திகள் 1

நாளை 9 மணி முதல் நீர் விநியோகம் தடை

(UTV|COLOMBO)-கண்டி – பொல்கொல்ல பகுதியின் சில இடங்களில் நாளை(12) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

பொல்கொல்ல நீர்வழங்கல் திட்டத்துடன் இணைந்த நீர் சுத்திகரிப்பு மத்திய நிலையத்துக்கு புதிய நீர்ப்பம்பி மற்றும் மின்னணு சாதனங்களை பொருத்தும் நடவடிக்கையின் முதற்கட்டம் இடம்பெறுவதால் இவ்வாறு நீர் விநியோகம் தடை படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, அமுனுகம வீதி, 606 ஆம் இலக்க வீதி, லேவெல்ல, பாபர்வத்த, சிறிமல்வத்த, மடவல வீதி, பல்லேகுன்னேபான, கங்கை வீதி, தெகல்தொருவ விகாரை வீதி ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

புதிய நீர்ப்பம்பி மற்றும் மின்னணு சாதனங்களைப் பொருத்தும் நடவடிக்கை இரு கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்படுவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 310 ஆக உயர்வு

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம்

ஜனாதிபதி கொலை சூழ்ச்சி; சிறைக் கைதிகளிடம் வாக்கு மூலம்