சூடான செய்திகள் 1

நாளை 24 மணி நேர நீர் வெட்டு…

(UTV|COLOMBO)  கொழும்பை அண்மித்த சில பிரதேசங்களுக்கு நாளை காலை 09.00 மணிமுதல் மறுநாள் காலை 09.00 மணி வரை 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.

இதன்படி மகரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிபிட்டிய, ருக்மல்கம, பெலவத்தை, மத்தேகொட, ஹோமாகம, பாதுக்க மற்றும் மீபே ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் கிழக்கு நகர நீர் வழங்கல் வேலைத் திட்டத்தின் கீழ் நீர் குழாய் கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட உள்ள அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாகவே நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.

 

 

 

Related posts

அடுத்த சில நாட்களுக்கு மழை மற்றும் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்

ராஜித சேனாரத்ன விளக்கமறியலில்

ஹஷீஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது