சூடான செய்திகள் 1

நாளை 24 மணித்தியால நீர் விநியோகம் தடை

(UTVNEWS|COLOMBO) – திருத்தப் பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை 24 மணித்தியாலத்திற்கு நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நாளை காலை 8.00 மணி முதல் நாளை மறுதினம் காலை 8.00 மணி வரையில் நீர் விநியோகம் இடை நிறுத்தப்படவுள்ளது.

அதன்படி பேலியகொடை, வத்தளை, மாபோல, ஜா-எல மற்றும் கட்டுநாயக்க, சீதுவ நகரசபை பிரதேசம், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே மற்றும் ஜா-எல பிரதேச சபைகளுக்குட்பட்ட பகுதிகளிலும், கம்பஹா பிரதேச சபை பகுதியில் ஒரு பிரதேசத்திலும் இவ்வாறு நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இரண்டு பெண்களை சீரழித்த காவற்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை…

பௌத்த பிக்குகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணாமாக வீதிக்கு பூட்டு

புளூமெண்டல் சங்கா 22ஆம் திகதி வரை விளக்கமறியலில்