உள்நாடு

நாளை முதல் 18 மணித்தியால நீர் வெட்டு

(UTV | கொழும்பு) – வத்தளையின் சில பிரதேசங்களில் நாளை(31) முதல் 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நாளை(31) இரவு 10 மணி முதல் ஏப்ரல் 1 ஆம் திகதி மாலை 4 மணி வரை 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி வனவாசல, ஒலியமுல்ல, வத்தளை – நீர்கொழும்பு வீதி, எவரிவத்த வீதி, தெலங்கபத்த, மீகஹவத்த, ஹேகித்த, பல்லியாவத்த, வெலியமுன வீதி, பலகல, கலஹாதுவ, மரதான வீதி, எலகந்த மற்றும் ஹெந்தல வீதியின் ஒரு பகுதி ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related posts

கொழும்பில் மாத்திரம் 5000ற்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள்

ஆனைவிழுந்தான் சம்பவம் – விசாரணைக்கு குழு நியமனம்

இலங்கை – இந்திய பிரதமர்களுக்கு இடையிலான மாநாடு இன்று