உள்நாடு

நாளை பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

(UTV|கம்பஹா ) – கம்பஹா மாவட்டத்தில் நாளை(20) காலை 8 மணி தொடக்கம் 18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ ஆகிய நகர சபைகளுக்குட்பட்ட பகுதிகளிலும் ஏக்கல, கந்தான, ஆனியாகந்த உள்ளிட்ட பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, குடெல்ல, கெரவலப்பிட்டிய, மாத்தாகொடெ, வெலிசறை, மாபோல ஆகிய பகுதிகளிலும் மஹபாகே, திக்கோவிட்ட, உஸ்வெட்டகெய்யாவ, பமுணுகம மற்றும் போபிட்டிய ஆகிய பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது

Related posts

போதியளவு சமையல் எரிவாயு கையிருப்பில் – லிட்ரோவின் அறிவிப்பு

இராணுவத் தளபதி யாழ். விஜயம்

இலங்கையில் சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு சீன நிறுவனங்கள் விருப்பம்!