அரசியல்உள்நாடு

நாம் அனைவரும் ஒன்றினைந்து செயற்படுவோம் – சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் ஜீவன் தொண்டமான் எம்.பி

“இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் சம உரிமைகளை அனுபவிக்ககூடிய சூழ்நிலை மலரும் பட்சத்திலேயே நிலையான சுதந்திரமும் பிறக்கும்.

அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். அதற்கான சிறந்த களமாக சுதந்திர தினம் அமையட்டும்.”

இலங்கையர்கள் அனைவருக்கும் 77 ஆவது சுதந்திர தின வாழ்த்துக்கள் – ஜீவன் தொண்டமான்!

77 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்நாளில் இலங்கையர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார் ஜீவன் தொண்டமான்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்.

கடந்த 76 ஆண்டுகளில் நாம் அடைந்தவற்றை விட இழந்தவையே அதிகம். அவ்வாறு இழந்தவற்றை மீளப்பெறுவதற்காக உலகப் பொருளாதாரத்தில் பாரிய பங்கை மீண்டும் பெறுவதே நம் அனைவரினதும் நோக்கமாக இருக்க வேண்டும்.

உலகம் முழுவதும் வாழும் இலங்கை மக்கள் எமது நாட்டின் அபிவிருத்திக்காக வழங்கி வரும் பங்களிப்பை நாம் நினைவுகூற வேண்டும்.

நமது இளைஞர் சமூகம் புதிய தொழில்முயற்சிகளை தொடங்குவதற்கான திட்டங்களை கொண்டிருந்தாலும் மூலதன பற்றாக்குறை பிரச்சினையாக உள்ளது.

எமது இளம் சந்ததியின் அத்தகைய திட்டங்களில், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு முதலீடு செய்யும் திறன் உள்ளது.

எனவே, இந்த நாட்டில் உள்ள இளைஞர் சமூகமும், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களும் புதிய வர்த்தகத் திட்டங்கள் மூலம் இலங்கையின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப பாடுபடுவார்கள் என நாம் நம்புவோம்.

முன்னேற்றமடைந்த சமூக, பொருளாதார, அரசியல் வெளியில் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கும் இலங்கையொன்று உருவாக நாம் அனைவரும் ஒன்றினைந்து செயற்படுவோம் என தெரிவித்துள்ளார்.

Related posts

புதிய மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

மேலும் 07 பேர் பூரண குணம்

ரணிலுக்கு தொடர்ந்தும் எதிர்ப்பு