அரசியல்உள்நாடு

நாமல் எம்.பிக்கு எதிரான வழக்கு – இரண்டு நீதிபதிகள் விலகல்

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை விசாரித்த இரண்டாவது நீதிபதியும் இன்று (27) விசாரணையிலிருந்து விலகினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுள திலகரத்ன, இன்று காலை வழக்கிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

பின்னர் வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது தானும் இந்த வழக்கிலிருந்து விலகுவதாக நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்கவும் அறிவித்துள்ளார்.

அதன்படி, வழக்குக்கு பொருத்தமான நீதிபதியை நியமிப்பதற்காக, மே 21 ஆம் திகதி கொழும்பு பிரதான மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே முன்னிலையில் அழைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

Related posts

இடைநடுவில் நிறுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் முன்னெடுங்கள் – ஜப்பானிய தூதுவரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை!

editor

வானை அதிர வைத்த வான்படை சாகசங்கள் [VIDEO]

இராஜகிரிய- ஒபேசேகரபுர பகுதிக்கு தற்காலிகமாக பூட்டு