கிசு கிசு

நாட்டை விட்டு வெளியேற அவசியம் இல்லை

(UTV | கொழும்பு) – முன்னாள் பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவரும் பிரபல தொழிலதிபருமான திரு நடேசன் கூறுகையில், அவரும் அவரது மனைவியும் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நாட்டை விட்டு வேறு நாட்டிற்கு செல்ல வேண்டிய அவசியம் எமக்கு இல்லை என்றும் அவர் கூறுகிறார்.

அவர் மீதான பெண்டோரா ஆவண குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகளாவிய ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்திய, பெண்டோரா ஆவணத்தில் திருக்குமரன் நடேசன் மற்றும் அவரது மனைவி நிரூபமா ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் இது குறித்து திருக்குமரன் நடேசன் வாக்குமூலம் ஒன்றினை வழங்க இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரணிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு FCID யில் முறைப்பாடு-பொதுபலசேனா அமைப்பு

ஜெயசூர்யாவின் குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்டால்! கிடைக்கும் தண்டனை இதுவா?

திலினி உள்ளிட்ட நால்வருக்கு, நவம்பர் 30 வரை விளக்கமறியல்!