அரசியல்உள்நாடு

நாட்டை பொறுப்பேற்க கோட்டாபய அழைத்த போது சஜித் மறுத்தார் – ஜீவன்

நாடு பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த போது நாட்டை பொறுப்பேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சஜித் பிரேமதாசவிற்கு அழைப்பு விடுத்தபோதிலும் எம்மிடம் 53 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் உள்ளனர். ஆகவே அடுத்த தலைமுறையை விட அடுத்த தேர்தல் தொடர்பாகவே எனது கவலையென கூறி நாட்டை பொறுப்பேற்க சஜித்பிரேமதாச மறுப்பு தெரிவித்தார் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நேற்று (25) கொட்டகலை சீ.எல்.எப்.மண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

53 பாராளுமன்ற உறுப்பினர்களை அங்கம் வகிக்கும் தலைவரும் 03 பாராளுமன்ற உறுப்பினர்களை அங்கம் வகிக்கும் தலைவரும் நாட்டை பொறுப்பேற்க மறுத்தமையினால் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை வைத்து இந்த நாட்டை பொறுப்பேற்று மீட்டுகொடுத்த ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

எதிர்வரும் 21 ஆம் திகதி நாட்டின் தலைவரை தெரிவு செய்யும் பொறுப்பு மக்கள் கையில் உள்ளது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனைவரும் வாக்களிப்பார்கள் மலையக பெருந்தோட்ட மக்களுக்கு 1,700 ரூபாய் சம்பளம் முதல் காணி உரிமை, கல்விக்கான அபிவிருத்தி அனைத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளார் பதுளை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தை ஆரம்பிக்க உள்ளோம் இந்த ஜனாதிபதி தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

Related posts

ஈரான் மீதான தாக்குதலால்: உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை உயர்வு

அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த விஜயதாச ராஜபக்ச.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஒருபக்கம் ஊழியர்களின் சத்தியாகிரக போராட்டம்! மறுபுறம் நியாயம் கோரி பேரணி!!