உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டு மக்களுக்கு இன மத கட்சி பேதமின்றி ஒன்றிணையுமாறு பிரதமர் கோரிக்கை

(UTV|கொழும்பு) – நாட்டி கொரோனா தொற்று ஏற்பட்டு பாரிய அச்சமான சூழ்நிலையில், அனைத்து மக்களும் இன, மத, கட்சி பேதம் இன்றி சுகாதார அமைச்சு விடுக்கும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக செயற்படுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுடனான  சந்திப்பு நேற்று(03) இடம்பெற்றது.

இதன் போது பிரதமர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில், சுகாதார துறைசார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகளை பின்பற்றி  செயற்பட்டு வருவதாகவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டமானது. சுகாதார துறைசார்ந்தவர்களின் ஆலோசனைகள் மூலம் செயற்ப்படுத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சுகாதார அச்சுறுத்தல் நிலையில், சுகாதார துறையினர் விடுக்கும் அறிவிப்புகள் குறித்து அதிக அவதானம் செலுத்துமாறும் பிரதமர்  பொதுமக்களிடம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

20 ஆவது அரசியலமைப்புக்கு எதிராக மேலும் 6 மனுக்கள்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 622ஆக அதிகரிப்பு

 “அகதி” என்ற அவப்பெயருடன் வந்தவர்களுக்கு கௌரவத்தை பெற்றுக்கொடுப்பதில், மக்கள் காங்கிரஸ் பெரும்பணி ஆற்றியுள்ளது’