உள்நாடு

நாட்டில் வேகமாக பரவும் தட்டம்மை நோய்!

(UTV | கொழும்பு) –

இந்த ஆண்டு மே மாதம் முதல் இந்த நாட்டில் 700 க்கும் மேற்பட்ட தட்டம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் கொழும்பு, கம்பஹா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, குருநாகல் மாவட்டங்கள் மற்றும் கல்முனை பிரதேசங்களில் இருந்தும் அம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தட்டம்மை என்பது மோபிலி வைரஸ் இனத்தைச் சேர்ந்த பெராமிக்ஸோ வைரஸால் மிகவும் வேகமாக பரவும் நோயாகும்.
சுவாசக்குழாய் வழியாக உடலினுள் நுழையும் வைரஸ் நோயின் அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்குப் பிறகு தென்படும் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.இதன் பிரதான அறிகுறிகள் காய்ச்சல், தடிமன், மூக்கு ஒழுகுதல் மற்றும் கண்கள் சிவத்தல்.

வெற்றிகரமான தடுப்பூசி திட்டத்தின் பின்னர் 2019 ஆம் ஆண்டில் இலங்கை அம்மை நோயில் இருந்து விடுபட்டிருந்தது.தெற்காசியாவில் அம்மை நோயை ஒழித்த ஐந்து நாடுகளில் இலங்கையும் ஒன்றாக காணப்பட்டது.எவ்வாறாயினும், நான்கு வருடங்களின் பின்னர் இலங்கையில் இருந்து தட்டம்மை நோயாளர்கள் பதிவாகின்றமை கவலையளிக்கின்றது.

இலங்கையில் மீண்டும் பதிவாகும் தட்டம்மை நோய் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனமும் அவதானம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, தட்டம்மை நோயை ஒழிக்க உலக சுகாதார அமைப்பின் தெற்காசிய மண்டலம் மற்றும் தேசிய ஆலோசனைக் குழுவிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் தடுப்பூசி போடும் திட்டம் ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஐ.தே.கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

சுற்றுலாப் பயணங்களுக்கு மீள் அறிவித்தல் வரை தடை

ஹப்புத்தளையில் ஹெலி விபத்து