உள்நாடு

நாட்டில் இன்றும் திட்டமிட்டபடி மின்வெட்டு

(UTV | கொழும்பு) – இன்றைய தினமும் (22), இரண்டு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, மாலை 4.30 மணி தொடக்கம் இரவு 10.30 மணி வரையான காலப்பகுதியில் A, B, C ஆகிய பிரிவுகளில் 02 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதனிடையே, தென் மாகாணம் மற்றும் துல்ஹிரிய, கேகாலை, அத்துருகிரிய ஆகிய பிரதேசங்களில் காலை 08.30 மணி முதல் 11.30 மணி வரையான காலப்பகுதிக்குள் 3 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

541 மெகாவாட் மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் இல்லாதமையால், இன்றும் (22) மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான அனுமதியை வழங்குமாறு பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபையிடம் கோரியிருந்தது.

இதேவேளை, மீள்புதுப்பிக்கத்தக்க சக்திமூலங்களை பயன்படுத்தி மின் உற்பத்தி திட்டங்களுக்காக 512 முதலீட்டு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை தெரிவித்துள்ளது.

தெரிவு செய்யப்பட்ட முன்மொழிவுகளை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சுலக்‌ஷக ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

MT New Diamond கப்பலில் மீண்டும் தீ பரவல் 

T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி!

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 471 ஆக அதிகரிப்பு