அரசியல்உள்நாடு

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் இளைஞர்கள் பங்காளர்களாக மாற வேண்டும் – சஜித்

தேர்தலொன்று முடிந்தாலும் நாட்டின் பிரச்சினைகள் தீரவில்லை. நாட்டு மக்கள் அழுத்தங்களோடு வசதியற்ற வாழ்க்கையை நாளும் பொழுதுமாக கழித்து வருகின்றனர்.

சிறு பிள்ளைகள், தாய்மார்கள், பிள்ளைகள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள், ஓய்வூதியம் பெறுவோர் என அனைவரும் பொருளாதார அழுத்தத்தில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குபவர்களாக ஆட்சியாளர்கள் இருக்க வேண்டும்.

வீழ்ச்சி கண்டு போயுள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். எதிர்வரும் தேர்தலின் ஊடாக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தில் இளைஞர்கள் பங்காளர்களாக மாற வேண்டும். பதில்கள் என்பது வெறும் விமர்சனங்களாக மாத்திரம் இருந்து விடக் கூடாது. தீர்வுகளைத் தேடும் விடயத்தில் இங்கு இளைஞர்களை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தலைமைத்துவம் வழங்குபவர்களாக மாற வேண்டும்.

நாட்டின் பிரச்சினைகளை தனி நபர்களாலோ அல்லது குழுக்களாலோ தீர்க்க முடியாது என்பதால் போட்டி, எதிர்ப்பு என்ற அரசியல் கலாசாரத்தை மறந்து மக்களின் பிரச்சினைகளுக்கு பதிலளிக்கும் வேலைத்திட்டத்தை வகுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் தோற்றாலும் கபட நாடகம் ஆடமாட்டோம். வெளிநாட்டு முதலீடுகள் நமது நாட்டுக்குத் தேவை. அன்னிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்கும் சூழலை இங்கு உருவாக்க வேண்டும். நாடாக இதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தருவோம்.

நாட்டின் ஏற்றுமதி சார்ந்த உற்பத்தித் தொழில்கள் வலுப்பெற வேண்டும். இதற்கு தயாராக உள்ள அனைத்து வர்த்தகர்களும் புதிய தொழில்களை நம்பிக்கையோடு ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வட கொழும்பு தேர்தல் தொகுதி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களது தலைமையில் அண்மையில் வட கொழும்பு கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.

வட கொழும்பு தேர்தல் தொகுதி பிரதான அமைப்பாளர் வை.சி.பீ.ராம் ஏற்பாடு செய்திருந்த இச்சந்திப்பில் வட கொழும்பு தேர்தல் தொகுதியைச் சேர்ந்த கட்சி செயற்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர். இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், வறுமை அதிகரித்துள்ளதால், இந்த வறுமையை ஒழிக்க வேண்டும். ஏழ்மை அதிகரித்துள்ளால், இந்த ஏழ்மையைப் போக்கத் தேவையான ஏற்பாடுகளுக்கான ஒத்துழைப்புகளை வழங்குவோம்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% பங்களிக்கும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மைகள் மீண்டும் வலுப் பெற வேண்டும். புதிய தொழில் முயற்சியாண்மைகளை உருவாக்க முயற்சி எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவும், ஒற்றுமையின்மையை உருவாக்கவும், நாட்டில் நிச்சயமற்ற நிலையை உருவாக்கவும், ஸ்திரமின்மை மூலம் அதிகாரத்தை கைப்பற்றவும் முயற்சிக்க மாட்டோம்.

இவற்றை விட நாடு முக்கியமானது.
220 இலட்சம் மக்களின் வாழ்வு பலப்படுத்தப்பட வேண்டும். நாட்டையும் மக்களையும் நோக்கிய சிறந்த பயணத்துக்கு தலைமைத்துவம் வழங்க தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Related posts

சீனாவின் ‘சினோபார்ம்’ புதனன்று வரும்

ஐ.தே.கட்சியின் தலைமைப் பொறுப்பு ஒரு இளம் உறுப்பினருக்கு

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்வு