உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் எரிபொருளுக்கான வரிசை

நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளன.

இன்று (28) நள்ளிரவு முதல் எரிபொருள் விநியோகத்திலிருந்து விலகுவதாக எண்ணெய் விநியோகஸ்தர்கள் விடுத்த அறிவிப்பையடுத்தே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தாபனத்தினால் இதுவரை அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மூன்று சதவீத கொடுப்பனவை நிறுத்த நடவடிக்கை எடுத்ததை அடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை,, நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என்றும், எரிபொருள் விநியோகம் வழக்கம்போல் நடைபெற்று வருவதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Related posts

இன்று 496 பேர் சிக்கினர்

கொழும்பு கோட்டையில் பொதுமக்களிடம் திருடிய பொலிஸ்-(VIDEO)

ஜப்பானிடம் இருந்து 38 மில்லியன் அமெரிக்க டொலர்