உள்நாடு

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை

(UTV | கொழும்பு) – நாட்டின் பல பகுதிகளில் இன்று (18) மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

Related posts

கலாம் உலக சாதனையில் இடம் பிடித்த ஹென்ஸாz அய்ஸzல்

editor

லுனாவ துப்பாக்கி சூடு – பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி நீக்கம்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 660