சூடான செய்திகள் 1

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய வானிலை

(UTV|COLOMBO) நிலவுகின்ற மழையுடன் கூடிய வானிலையில் இன்றும், நாளையும் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களுடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதனுடன் திருகோணமலை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லி மீட்டர் அளவான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

பொதுப் போக்குவரத்து பயன்படுத்துவது தொடர்பில் விசேட அறிவித்தல்

கொழும்பு மாநகர எல்லைக்குள் நாளை குறைந்த அழுத்தத்துடன் குழாய் நீர்

சிம்பாவே முன்னாள் ஜனாதிபதி ராபர்ட் முகாபே உலகினை விட்டும் பிரிந்தார்