உள்நாடு

நாடு முழுவதும் கனமழை – நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்

நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 73 முக்கிய நீர்த்தேக்கங்களில் 46 நீர்த்தேக்கங்கள் இன்னும் நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவற்றில், அம்பாறை மாவட்டத்தில் உள்ள 9 நீர்த்தேக்கங்களில் 7, அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 10 நீர்த்தேக்கங்களில் 7, பதுளை மாவட்டத்தில் உள்ள 7 நீர்த்தேக்கங்களில் 5, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 4 நீர்த்தேக்கங்களில் 2, ஹம்பாந்தோட்டை மாவட்டம் மற்றும் காலி மாவட்டத்தில் உள்ள 2 நீர்த்தேக்கங்களில் 1 நீர்த்தேக்கத்திலும் நீர் வழிந்து செல்வதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் உள்ள மூன்று நீர்த்தேக்கங்களும், குருநாகல் மாவட்டத்தில் உள்ள 10 பிரதான நீர்த்தேக்கங்களில் 5, மொனராகலை மாவட்டத்தில் உள்ள 3 பிரதான நீர்த்தேக்கங்களில் 2, பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள 4 பிரதான நீர்த்தேக்கங்களில் 3, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 5 நீர்த்தேக்கங்களில் 2, வவுனியா மாவட்டத்தில் உள்ள 4 முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்று என்ற அடிப்படையில் இதுவரையில் 46 நீர்த்தேக்கங்களில் நீர் இன்னும் நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

ஐ.தே.க. – ஐ.ம.ச. இணைவது குறித்து மகிழ்ச்சியான செய்தியை கூறிய இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

editor

கனவு காண அனைவருக்கும் உரிமை உண்டு, ஆனால் அது கனவாகவே இருக்கும் – ஜனாதிபதி அநுர

editor

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்