உள்நாடுசூடான செய்திகள் 1

நாடு முழுவதும் இருட்டில் மூழ்கும் வாய்ப்பு – மின்சார சபை எச்சரிக்கை.

(UTV | கொழும்பு) –

நாட்டில் மீண்டும் மின் தடை ஏற்படக்கூடிய நிலை உள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த மின் விநியோக பாதையில் உடனடியான சீரமைப்பை மேற்கொள்வது உள்ளிட்ட சில பரிந்துரைகளை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கியுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படாவிட்டால், மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்படிகின்றது.

கடந்த சனிக்கிழமை மின்னல் தாக்கம் காரணமாக நாடளாவியரீதியில் மின் தடை ஏற்பட்டிருந்தது. இந்த மின்னல் தாக்கம் காரணமாக மின் விநியோகபாதைக்கு பாரிய சேதம் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

புதிய களனி பாலத்திற்கு பூட்டு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பிலிப்பைன்ஸுக்கு

இன்று முதல் 3 மணி நேரம் மின்வெட்டு