உள்நாடு

நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் இன்று இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் மார்ட்டின் சோங்கோன் இன்று (11) நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாக இலங்கை நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது விடுத்த அழைப்பின் பிரகாரம், அனைத்து நாடாளுமன்ற ஒன்றியத்தின் பொதுச் செயலாளரின் விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மார்ட்டின் சோங்கோன், நாடாளுமன்ற பிரதிக் குழுத் தலைவர் அங்கஜன் இராமநாதன் மற்றும் நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க ஆகியோரால் வரவேற்கப்பட உள்ளனர்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் மார்ட்டின் சோங்கோன் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவை மார்ட்டின் சோங்கோன் சந்திக்க உள்ளார்.

அதன் பின்னர், நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் பொதுச் செயலாளர், அவைத் தலைவர் சுசில் பிரேமஜயந்த மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரையும் சந்திக்க உள்ளார்.

Related posts

ஊரடங்கு உத்தரவை மீறிய 466 பேர் கைது

உரத்தின் விலை குறைகிறது : விவசாய அமைச்சர்

ஒரு கிலோ கோழி இறைச்சியை இலஞ்சமாக பெற்ற இருவர் கைது

editor