வகைப்படுத்தப்படாத

நாடளாவிய ரீதியில் லங்கா சதொச’வின் கிளைகளை 400 வரையில் உயர்த்த நடவடிக்கை..

(UDHAYAM, COLOMBO) – நாடளாவிய ரீதியில் லங்கா சதொச’வின் கிளைகளை 400 வரையில் உயர்த்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்திருந்தார்.

கடந்த புதன்கிழமை(21) நாரஹேன்பிட்டியவில் அமைந்துள்ள வணிக மற்றும் கைத்தொழில் இராஜாங்க அமைச்சகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வைத்தே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

“..கடந்த வாரம் சதொசவின் கிளைகள் மூன்று கிழக்கில் திறந்து வைக்கப்பட்டது. தற்போது சதொச நிறுவன கிளைகள் 380 இருக்கையில் இன்னும் 37 கிளைகளை நாடாளாவிய ரீதியில் திறந்து வைக்க எண்ணியுள்ளோம்.

மேலும், அண்மையில் நாட்டில் நிலவிய அனர்த்த நிலை காரணமாக சுமார் 9 சதொச கிளைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றினையும் விரைவில் வழமைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது..” எனவும் அமைச்சர் ரிஷாத் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

பப்புவா நியூ கினியாவில் பாரிய நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு

சிகாகோவில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி குழந்தைகள் உள்பட 8 பேர் பலி

மட்டக்களப்பு – கொழும்பு வீதியில் கோர விபத்து!