சூடான செய்திகள் 1

நாடளாவிய ரீதியில் சீரான காலநிலை

(UTVNEWS | COLOMBO) – நாடளாவிய ரீதியில் சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதோடு நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து நிலவும் என வானிலை அவதான நிலையம் இன்று(06) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வட மாகாணத்தில் மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

வடமத்திய மாகாணத்திலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஒன்றிணைந்த எதிர்கட்சி சுயாதீனமாக செயற்படுவோம் என்று தெரிவித்துள்ளமை வெறும் நாடகமே

எரிபொருள் விலையை குறைக்குமாறு ஐ.தே.க கோரிக்கை

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன் முற்றுப் பெறுகிறது…