உள்நாடு

நாடளாவிய ரீதியில் ஊட்டச்சத்து மற்றும் உணவு கிடைப்பது குறித்த தரவுகளை சேகரிக்க அரசாங்கம் நடவடிக்கை

(UTV | கொழும்பு) –     நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஊட்டச்சத்து மற்றும் உணவு கிடைப்பது குறித்த தரவுகளை சேகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் போஷாக்கு பிரிவின் தலைவர் டொக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அதன் படி அடுத்த மாதம் முதல் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் நோக்கில் நாட்டிலுள்ள அனைத்து வீடுகளிலும் இத்தரவு சேகரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்தார்.

இதேவேளை சந்தையில் துரித உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பின் காரணமாக சிறுவர்களின் துரித உணவுப் பாவனை குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். துரித உணவுகளை உட்கொள்வதைக் குறைப்பதன் மூலம், நீரிழிவு போன்ற தொற்றாத நோய்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு

ஷானி CID இல் சுமார் 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் [VIDEO]

கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு கால வரையறையின்றி பூட்டு