உள்நாடு

நாடளாவிய ரீதியான மின்துண்டிப்பு தொடர்பில் நாளை இறுதித் தீர்மானம்

(UTV | கொழும்பு) – நாளை மற்றும் நாளை மறுதினங்களில் நாட்டு மக்கள் இருளில் இருக்க நேரிடும் என அண்மையில் அறிவித்த மின்சார சேவையாளர்கள் சங்கத்தினர், பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுவது தொடர்பான தமது இறுதி தீர்மானத்தை நாளை (03) அறிவிக்க உள்ளனர்.

இலங்கை மின்சார சேவையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் இதனைத் தெரிவித்துள்ளார்.

மின்துண்டிப்பை மேற்கொள்ளாது தொழிற்சங்க நடவடிக்கையில் மாத்திரம் ஈடுபடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தங்களது தொழிற்சங்கத்தினர் இல்லாவிட்டால் மின்சார விநியோக நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல முடியாதென இலங்கை மின்சார சேவையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் எச்சரித்துள்ளார்.

Related posts

விவசாய அபிவிருத்திக்காக 3 இராஜாங்க அமைச்சுக்கள்

ஆயிரம் இழுபறி தொடர்கிறது

MV Xpress pearl கப்பலுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு