அரசியல்உள்நாடு

நாங்கள் நாட்டுக்காக உழைத்துள்ளோம் – நாமல்

நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்குவதற்காக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற தொகுதி கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாமல் ராஜபக்ஷவும் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

“இந்தச் செய்தியை கிராமத்திற்கு எடுத்துச் செல்லுங்கள், எங்களிடம் ஒரு திட்டம் உள்ளது, நாங்கள் நாட்டுக்காக உழைத்துள்ளோம்.

இந்த நாட்டுக்கு எதிராகவில்லை. நம் நாட்டுக்கு பொருந்தாத எந்த சட்டத்தையும் இயற்ற முயற்சிக்க மாட்டோம்.

180 பில்லியன் டொலர் பொருளாதாரமாக மாறுவதே எங்கள் குறிக்கோள். இது சாத்தியமா என்று சிலர் கேட்கிறார்கள்.

உழைக்க முடியாதவர்கள், வேலை செய்யாதவர்களுக்கு அதனை செய்ய முடியாது. ஆனால் அதை எப்படி செய்வது என்று எங்களுக்குத் தெரியும்” என்றார்.

Related posts

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

மொனராகல மாவட்டம் – முழுமையான தேர்தல் முடிவுகள்

பாணின் புதிய விலை இதோ!