கிசு கிசு

நடிகை கரீனாவிற்கு ராகுல் காந்தியின் மேல் காதல்?

(UTV|INDIA)-பிரபல இந்தி நடிகை கரீனா கபூர், பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகானை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு குழந்தையும் உள்ளது.

ஆனால், சயீப் அலிகான் மீது காதல்வயப்படுவதற்கு முன்பு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கரீனா கபூர் விரும்பி உள்ளார். இந்த தகவலை ஒரு பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். அவர், சோனியா காந்தி குடும்பத்துக்கும், கரீனா கபூர் குடும்பத்துக்கும் மிகவும் நெருக்கமானவர்.

இரு குடும்பங்களைப் பற்றியும் தான் எழுதிய புத்தகத்தில் அவர் இதை தெரிவித்துள்ளார். கடந்த 2002-ம் ஆண்டுவாக்கில், இரு குடும்பங்களும் நெருங்கி பழகி வந்துள்ளன. அப்போது, ராகுல் காந்தி, எம்.பி. ஆகவில்லை. அவர் மீதான தனது விருப்பத்தை வெளிப்படுத்திய கரீனா கபூர், ராகுலுடன் ஊர் சுற்ற ஆர்வமாக இருப்பதாக கூறினார்.

அதுபோல், ராகுல் காந்தியும் நடிகை கரீனா கபூர் நடித்த படங்களை பார்ப்பதில் ஆர்வம் காட்டினார். முதல் நாளிலேயே அந்த படங்களை பார்த்து விடுவார் என்று அந்த பத்திரிகையாளர் தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.

ஆனால், இந்த தகவல்களை நடிகை கரீனா கபூர் தற்போது மறுத்துள்ளார். “அவை அனைத்தும் இரு குடும்பங்களும் நெருக்கமாக பழகிய கடந்த கால நிகழ்வுகள்” என்று அவர் கூறினார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

சிறுபான்மை கட்சிகளுக்கு எந்தவொரு அமைச்சரவை அமைச்சு பதவிகளும் இங்கு இல்லை

டி-20 தொடரில் இருந்து மெத்தியூஸ் நீக்கம் – லசித் விளையாடுவாரா?

ரம்புக்கன பிரண்டிக்ஸில் 19 பேருக்கு கொரோனா