விளையாட்டு

தோல்விக்கான காரணம் வெளியானது…

(UTV|COLOMBO) இலங்கை அணியின் விக்கெட்டுக்கள் முக்கியமான தருணங்களில் அடுத்தடுத்து சரிந்தமையே தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைவதற்கு காரணம் என அணியின் தலைவர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

மைதானத்தில் வைத்து, உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எனவே அடுத்த போட்டியில் வெற்றிப் பெறுவதற்கு, அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களுக்கு தமது பொறுப்பை உணர்த்தி களமிறங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற முதலாவது ஒரு சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்கா அணி இலங்கை அணியை 8 விக்கட்டுக்களால் வெற்றி கொண்டது.

 

 

 

 

Related posts

ஒலிம்பிக் போட்டியில் வெளிநாட்டு ரசிகர்களுக்கு தடை

ஐபிஎல் ஏலத்தில் 590 வீரர்கள் பங்கேற்பு

தனது ஓய்வு குறித்து அறிவித்த ரங்கன ஹேரத்