விளையாட்டு

தோனியை தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு

(UTV| இந்தியா)- இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் விக்கெட் காப்பாளருமான மஹேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

தோனியின் அறிவிப்பை தொடர்ந்து சுரேஷ் ரெய்னா தானும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2014-ம் ஆண்டின் இறுதியில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற டோனி இப்போது சர்வதேச ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டியிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அவர் தன் மீது அன்பு காட்டி ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச 20 ஓவர் போட்டியில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனைக்குரியவர் சுரேஷ் ரெய்னா. சர்வதேச கிரிக்கெட்டை விட்டு விலகினாலும், ஐ.பி.எல்.-ல் தொடர்ந்து விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி!

பாகிஸ்தான் அணி 5 விட்டுக்களினால் வெற்றி

லசித் மாலிங்க தொடர்பில் சச்சின் புகழாரம்!!