வணிகம்

தொழில்துறையை கட்டியெழுப்பும் நோக்கிலான வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு

(UTV|COLOMBO) நாட்டின் பிரதான தொழில்துறையை கட்டியெழுப்பும் நோக்கிலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் தயாகமகே தெரிவித்துள்ளார்.

வாசனைத்திரவியங்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நிதியுதவியை வழங்கும் நிகழ்வு இந்நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் தயாகமகே ஏற்றுமதித்துறையின் வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

சிறிய மற்றும் பாரிய அளவிலான வர்த்தகத்தை இலக்காகக் கொண்ட பயணத்தின் புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதன் முதற்கட்டமாக தெஹியத்தகண்டிய, பதியத்தலாவ, மஹஓய மற்றும் அம்பாறை ஆகிய பிரதேசங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

 

 

 

Related posts

புத்தாண்டில் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கும்

கொழும்பு பங்கு சந்தைக்கு இன்று பூட்டு

ஏற்றுமதியை பலப்படுத்துவதற்காக தமது இணையத்தளத்தை மறு வடிவமைக்கும் கிரிஸ்புரோ